அடோப் இன்டிசைன் ஓர் அறிமுகம்
அடோப் நிறுவனத்தின் ஏற்கனவே உள்ள பேஜ்மேக்கரை போன்று ஒத்துள்ளது இந்த இன்டிசைன்.
மேலும், மேஜ்மேக்கரின் அடுத்த படைப்பாகவும் இது கருதப்படுகிறது. காரணம், மேஜ்மேக்கரில் டிடிபி வேலைக்காக நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் இதில் நாம் செய்யலாம். கோரல் டிரா மற்றும் அடோப் இல்லுஸ்ரேடரில் நாம் மேற்கொள்ளும் Re-Draw, Logo Creation போன்ற சிற்சில பணிகளையும் இந்த இன்டிசைனில் நாம் மேற்கொள்ள முடியும்.
பேஜ்மேக்கரில் ஏற்பட்ட பலவகையான குறைகளை நீக்கப்பட்டு, அதைவிட மேலாக அதிகப்படியான டிடிபி வேலைகளையும், மற்றும் குறிப்பாக இ பப்லிஷிங் துறைக்கு மிகவும் வேண்டப்பட்ட அப்ஷிகேஷானாகவும் இந்த இன்டிசைன் உள்ளது.
மேலும், பேஜ்மேக்கரில் செய்து முடிக்கப்பட்ட பைலைக்கூட இன்டிசைனில் ஓப்பன் செய்து திருத்தங்கள் செய்யலாம்.